June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இலத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா

1 min read

Loan distribution ceremony for women’s self-help groups in Latur

16.5.2025

தென்காசி மாவட்டம், இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்  கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இலத்தூர், பகவதிபுரம். பாலமார்த்தாண்டபுரம், மற்றும் சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான கடன் வழங்கும் விழாமாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது;-

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வோளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழு கடன் மற்றும் மத்திய கால கடன்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கடந்த 15.05.2025 முதல் 17.05.2025 வரை நடைபெறுகிறது. இது போன்ற கடன் வழங்கும் விழாக்கள் மேலகரம், நயினாகரம், புளியங்குடி, சங்கரன்கோவில், மற்றும் திருவேங்கடம் ஆகிய இடங்களில் இன்று நடைபெறுகிறது என்றும், நாளை கீழப்பாவூர், ஆலங்குளம், கடையம், வாசுதேவநல்லூர், செண்பகாபுரம், குருவிகுளம் ஆகிய பகுதிகளில் கடன் வழங்கும் விழாக்கள் நடைபெற உள்ளன என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த கடன் முகாமில் பங்கேற்க முடியாதவர்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி உரிய ஆவணங்களை அளித்து. தங்களுக்கு தேவையான கடன்களை பெற்று பயனடையலாம் .

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், 29 நபர்களுக்கு ரூ. ஒரு கோடியே பன்னிரெண்டு இலட்சம் அளவிற்கு சுய உதவிக்குழு கடன்கள், மத்திய கால கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள்,டாப்செட்கோ கடன்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்  வழங்கினார்.

மேலும் 564 நபர்களுக்கு 12.20 கோடி அளவிற்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கிட கடன் விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் கு.நரசிம்மன். துணைப்பதிவாளர்கள் பா.பூர்விசா. ப.கோபிநாத். கூட்டுறவு சார்பதிவாளர்கள்  மாரியப்பன், மல்லிகா, ஸ்ரீவித்யா.சண்முக ப்ரியா, சங்க செயலாளர்கள், சங்க பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *