August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்

1 min read
4 IAS officers appointed as Tamil Nadu government spokespersons   
14.7.2025
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்
* எரிசக்தித் துறை
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
* போக்குவரத்துத் துறை
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
*வெளிநாடு வாழ் தமிழர் நலன்
* பள்ளிக் கல்வித் துறை
* உயர்கல்வித் துறை
* கைத்தறி மற்றும் கதர்த் துறை
* மனிதவள மேலாண்மைத் துறை

ககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
* நீர்வளத் துறை
* சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
* தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
* இயற்கை வளங்கள் துறை

தீரஜ் குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்
* உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

அமுதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
* சிறுபான்மையினர் நலத்துறை
* வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
* சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
* சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள். அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *