June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் மகளிர் பள்ளி விடுதியில் 9 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

1 min read
9 students vomit and faint at Courtallam Girls' School hostel 
17.7.2025
தென்காசி மாவட்டம் குற் மாலம் இராமாலயம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெண்கள் மேல் நிலைப் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட் டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் ராமாலயம் காலனி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 125 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் 60 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் நேற்று 53 பேர் விடுதியில் இருந்துள்ளனர்

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் மாணவி களுக்கு காலை உணவாக இட்லி மற்றும் சாம்பார்
வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவை சாப் பிட்ட சில நிமிடத்திலேயே 3 மாணவி களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிவர் வயிறு வலிப்பதாக தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்கள் அவர் களை மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது மேலும் சில மாணவிகள் தங்களுக்கும் பாதிப்பு இருப்பதாக கூறியதால் மொத்தம் 9 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்த போது பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கு, காலை உணவில் நாயின் முடி கிடந்த ததே காரணம் என தகவல் பரவி உள்ளது. சில மாணவிகள் அதனை தாங்களும் பார்த்ததாக தெரிவித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் பல நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் மிகவும் நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்றும் இருப்பதாகவும் அந்த நாயின் முடிதான் உணவில் கிடந்ததாகவும் மாணவிகளிடையே தகவல் பரவியது மாணவிகளுக்கு ஏற்பட்ட உடல்நலகுறைவிற்கு இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்ததும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில்
மருத்துவக் குழுவினர் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து உணவு, தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட் டது, மேலும் தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்த உத்தரவிட்ட தோடு, சுகாதார வசதிகளையும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தென்காசி அரசு மருத்துவமனை கண் காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் கூறுகையில், 'குற்றாலம் பள்ளியில் 125 மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 60 மாணவிகள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். நேற்று 53 மாணவிகள் விடுதிக்கு வந்துள்ளனர்.9 மாணவிகளுக்கு ஒவ்வாமை காரணமாக பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங் சுப்பட்டுள்ளது. மதியம் உணவாக தயிர் சாதம் மிகவும் குறைந்த நிலையில் வழங்கப்பட்டது. வாந்தி வருவதாகவும், மயக்க மாக இருப்பதாகவும், சிறிது வயிறு வலிப்பதாகவும் கூறினர்.
மருத்துவமனையில் சேர்ந்த மாணவிகள் சிகிச் சைக்குப் பிறகு அனைவரும் நலமாக உள்ளனர். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.

குற்றாலத்தில் பள்ளி மாணவிகள் ஒன்பது பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *