August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் – டெல்லி புறப்பட்டது

1 min read

The country’s first hydrogen train, manufactured in Chennai, leaves for Delhi

23.8.2025
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கியது. ஹைட்ரஜன் ரெயிலின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொள்வதற்காக, சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி இந்த ரெயில் இன்று டெல்லி புறப்பட்டது. அரியானாவின் சோனிபத்தில் இருந்து ஜிந்த் வரை ஹைட்ரஜன் ரெயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *