பாவூர்சத்திரத்தில் குழந்தையை அச்சுறுத்திய அங்கன்வாடி பணியாளர் கைது
1 min read
Anganwadi worker arrested for threatening child in Pavurchatra
6.6.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அங்கன்வாடி குழந்தையை கோணிப்பையில் போட்டு அச்சுறுத்திய அங்கன்வாடி பணியாளர் சஸ்பண்ட் செய்யப்பட்டார்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இம்மையத்தில் வென்னிமலை அருகில் உள்ள வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள ஏழை, எளிய குழந்தைகள் சென்று அடிப்படை கல்வி மற்றும்எளிமையான சிறுசிறு விளையாட்டுகளையும் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் சுமார் 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் அங்கன்வாடி உதவி பணியாளர் கீழப்பாவூர் , பாரதியார் தெருவில் வசித்து வரும் சுடலையாண்டி மனைவி கலைச்செல்வி (வயது 52) அங்கு பயிலும் ஒரு குழந்தையை அச்சுறுத்தும் வகையில் கோணிப்பையில் போட்டு மூடி பயமுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வீடியோவும் ஒருவரால் எடுக்கப்பட்டு, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி தற்பொழுது வைரலாகி வருகிறது. இதனையடுத்து
குழந்தையின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர்
அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வியை சஸ்பண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.