ஆழ்வார்குறிச்சி அருகே மான்- பைக் மீது மோதி வாலிபர் படுகாயம்
1 min read
Youth seriously injured after being hit by deer and bike near Alwarkurichi
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பூவன்குறிச்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 26). சம்பவத்தன்று இவர் விகேபுரத்தில் இருந்து தனது பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார் இருசக்கர வாகனம் வடமலை சமுத்திரம் கருத்தபிள்ளையூர் செல்லும் சாலையில் சென்ற போது மான்கள் கூட்டம் சாலையை கடந்துள்ளன.
இதில் ஒரு மான் மீது பைக் மோதியதில் சக்திவேல் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம டைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை தனியார் மருத் துவமனையில் அனும தித்தனர். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடையம் வட்டார பகுதியில் சாலைகளில் உலாவரும் வனவிலங்குகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை வனப்பகுதிக்குள் விலங்குகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் வனவிலங்குகளால் விபத்து ஏற்படுவது தொடர்க தையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்காசி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விலங்குகளை வனப்ப குதிகளுக்குள் விரட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும், வனவிலங்குகளால் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.