கனிமொழிக்குபெரியார்விருது- தென்காசி தெற்கு மாவட்ட திமுகவினர் வாழ்த்து
1 min read
DMK members of Tenkasi South District congratulate Kanimozhi for Periyar Award
4.9.2025
திமுக முப்பெரும் விழாவில்
பெரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கனிமொழி எம்.பி.க்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுகவினர் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதிக்கு செப்.15ல் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கனிமொழி எம்.பி.க்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில் நேரில் சென்று வாழ்;த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தென்காசி தொகுதி மேற்பார்வையாளர் கலைகதிரவன், மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் பொன் செல்வன், ஜெ.கே.ரமேஷ், க.சீனித்துரை,வல்லம் எம்.திவான்ஒலி, ஆர்.எம்.அழகுசுந்தரம், சிவன்பாண்டியன், ஆ.ஜெயக்குமார், சேக்முகமது, சிவகுமார், கடையம் குமார், கடையநல்லூர் ஜெயா, மணிகண்டன், பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, செல்லத்துரை, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை மா.முத்துகுமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லட்சுமணன், ஆலங்குளம் பேரூர் செயலாளர் நெல்சன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், சுரண்டை நகர செயலாளர் கணேசன், ஊராட்சி துணைத்தலைவர்கள் ஜெயராணி அந்தோணிராஜ், சுதன், யூனியன் சேர்மன் செல்லம்மாள், கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர்ரகுமான், ஒன்றிய கவுன்சிலர் கலாநிதி, நிர்வாகிகள் தேவி, ராஜேஷ், ஷபீக் அலி, பாலசுப்பிரமணியன், மாரியப்பன், மதிச்செல்வன், சேர்மதுரை, முத்துசுப்பிர மணியன், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.