தென்காசி: கந்து வட்டி கொடுமையால் பாறையிலிருந்து குதித்து பெண் தற்கொலை
1 min read
Tenkasi: Woman commits suicide by jumping off cliff due to usury
3.9.2025
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியில் கந்துவட்டி கடன் தொந்தரவு காரணமாக பாறையில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வளையர் குடியிருப்பு முருகன் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி லெட்சுமி (வயது 45). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடனை கொடுத்தவர் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதற்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கணவன், மனைவி இருவரும் கேரளாவிற்கு சென்று கூலி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடன் கொடுத்த வர்கள் கேரளாவிற்கும் நேரடியாக சென்று கணவன், மனைவி இருவரிடமும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லெட்சுமி மனமுடைந்து சொக்கம்பட்டிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சொக்கம்பட்டிக்கு
மேற்கு பகுதியில் உள்ள
சேம்புத்துநாதர் கோயில் செல் லும் வழியில் உள்ள உயரமான பாறை மீது ஏறி கீழே குதித்து தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு கந்து வட்டி தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.