June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி

1 min read

Bathing allowed at all waterfalls in Courtallam

27.9.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இந்நிலையில் நேற்று தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை அடிக்கும். குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

குற்றாலத்தில் ஏற்படும் இதமான குளிர்ந்த சூழ்நிலையை அனுபவிக்கவும், மெல்லிய சாரல் மலையில் நனையவும், அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் வந்து குவிந்து விடுவார்கள். அதன்படி குற்றாலத்தில் இந்த ஆண்டு
சீசன் சிறப்பாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் சீசன் காலம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது

இந்நிலையில் இன்று காலை முதல் குற்றாலம் பகுதியில் மழையின் வேகம் சற்று குறைந்தது இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்தும் குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்னர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *