தோரண மலையில் பஞ்சபூதங்களுக்கு பொங்கல் வழிபாடு
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
Pongal worship to the five spirits at Thorana Hill
5/10/2025
தென்காசி மாவட்டம் கடையம் பாதையில் உள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் இன்று
பஞ்ச பூதங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு
திரளான பக்தர்கள் பங்கேற்பு
தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் இன்று காலை பஞ்ச பூதங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விருட்ஷ ராஜ பூஜை, 27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்களுக்கான வழிபாடு, சப்த கன்னிகள் பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஸ்ரீ வல்லப விநாயகர் கோவில் பின்புறம் சிவனாக போற்றப்படும் அரச மரம், பார்வதியாக போற்றப்படும் வேப்ப மரத்திற்கு ஸ்ரீ விருட்ஷ ராஜ பூஜையும், சப்த கன்னிகள் மற்றும் 21 நட்சத்திரங்களுக் கான மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சூரிய பகவானுக்கு உகந்த தினமான இன்று நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை பாதுகாப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கு பிரசாரதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.