தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min read
I can’t tolerate the arrival of the Thawekavis: Edappadi Palaniswami interview
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அவரை வரவேற்கும் வகையில் அதிமுகவினர் மட்டுமின்றி பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் தங்களது கொடிகளை ஏந்தியவாறு நின்றனர். இதனிடையே அந்த கூட்டத்திற்குள் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சிலரும் தங்களது கொடியை ஏந்தி நின்றனர்.
அப்போது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. இதோ பாருங்கள் “கொடி (தவெக) பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாங்க…” எழுச்சி.. ஆரவாரம். என்று கூறினார். அதிமுக கூட்டத்தில் தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி கூறிய வார்த்தையால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கூட்டங்களில் தவெக கொடியை அதிகம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தவெகவினர் விருப்பப்பட்டு, பொதுக்கூட்டத்திற்கு வந்து ஆதரவு கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே விமர்சனம் செய்கின்றனர். அவர்களால் பொறுக்க முடியல. திமுக கூட்டணியில் விரிசல் இப்போதே தொடங்கிவிட்டது; அதிமுக கூட்டணி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை, எங்கள் கூட்டணி சுதந்திரமானது. அதிமுக கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையற்ற விமர்சனம் செய்கின்றனர். கட்சித் தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையற்ற விமர்சனம் செய்கின்றனர்.
இவ்வாற அவர் கூறினார்.