June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளத்தில் ஜேக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

1 min read

Demonstration on behalf of Jackto Geo in Alankulam

17.10.2025

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக அரசின் தேர்தல்கால வாக்குறுதி யானபழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை அட்டை அணிந்துஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளத்தில் ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதியதிட்டம் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
தென்காசி மாவட்ட தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப் பாளருமான ஆரோக்கிய ராசு தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பொறுப்பாளரும் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை பொறுப்பாளருமான அன்பரசு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலங்குளம் வட்டார செயலாளர் பவுல் அந்தோணி ராஜ் வரவேற்று கோரிக்கை விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதியில் தெரிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசை போல் தமிழகத்தில் உள்ள இடைநிலைஆசிரியர் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரிய இயக்குனர் ஆகியோரின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் ஊதிய குழு 21 மாதநிலுவைத் தொகை வழங்க வேண்டும். அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான
3 சதவீத அகவிலைப்பிடியை உடனே வழங்க வேண்டும் . அரசு அலுவலகங்கள் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப் பூதிய காலத்தை பணி வரன் முறை படுத்த வேண்டும்.சத்துணவு அமைப்பாளர் செவிலியர் உட்பட அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பத்து அம்ச கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

கோரிக்கைகளை விளக்கி வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகி ஞானசேகர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஜானி தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி பாபு துரை ஆகியோர் பேசினார்கள் இறுதியில் அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் முத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *