June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் காட்டு யானை அட்டகாசம் – பொதுமக்கள் பீதி

1 min read

Wild elephant rampage in Tenkasi district – public panic

22.10.2025
தென்காசி மாவட்டம், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், சொக்கம்பட்டி, சிவகிரி, பகுதிகளில் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்த நிலையில் அது மீண்டும் மீண்டும் விளை நிலங்களுக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.

கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தென்னை, மா, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இப்பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை யானை ஒன்று அந்த பகுதியில் தொடர்ந்து விளைநிலங் களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனை பார்த்த விவசாயிகள் இரவு பகலாக யானையை கண்காணித்து வனத்துறை உதவியுடன் யானையை விரட்டினர்.

தற்போது அந்த ஒற்றை யானை கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் விவசாயி வலங்கையா பாண்டியன் என்பவரது தோப்பிற்குள் புகுந்து 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தற்போது இந்த யானை, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் விவசாயி முருகன் என்பவரது தோப்பில் உலா வந்தது.

நேற்று காலையில் விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் யானையைப் பார்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த கடையநல்லூர் வனச்சரக அலுவலர் கனகராஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் யானையை வனத்திற்குள் விரட்டும்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் கடந்த யானையின் சாணத்தை பரிசோதித்ததில் யானை உட்கொண்ட உணவுகள் ஜீரணிக்காமல் வெளி யேறி கிடந்தது. மேலும் யானையும் சோர்வடைந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒரே இடத்தில் நிற்பதால் யானையை மயக்க ஊசி செலுத்தி அதற்கு முதலுதவி முதலுதவி அளித்து வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக கால்நடை மருத்துவர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

நேற்று மாலையில் நெல்லையில் இருந்து கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் மற்றும் உயிரியலாளர் கந்தசாமி தலைமையிலான குழுவி ஊர்கள் டிரோன் கேமராமூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது யானை சோர்வடைந்து மெலிந்த நிலையில் எலும்பும், தோலுமாக நிற்பதும், தென்னை குருத்தை சாப்பிட்டு கொண்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவக் குழுவினர் கேழ்வரகு மாவு, கருப்பட்டி, உப்பு ஆகியவற்றை உருண்டை யாக பிசைந்து அதில் மாத் திரைகள் வைத்து யானை நிற்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வைத்தனர்.

மேலும் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் கனகராஜ், புளியங்குடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அம்பலவாணன் ஆகியோரும் இப்பகுதியில் முகாமிட்டு விவசாயிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் யானை நிற்கும் இடத்திற்கு செல்லாதவாறு கண்காணித்து வருகின்றனர். இரவு நேரத்தில் யானை வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *