June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற கோவில் ஊழியர்கள் மீது தாக்குதல்

1 min read

Attack on temple workers trying to remove encroachments near Courtallam

14/11/2025
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற கோவில் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம்
குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 32 சென்ட் இடம் உள்ளது.

இந்த இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் செயல் அலுவலர் பொன்னி தலைமையிலான ஊழியர்கள் நேற்று அந்த பகுதிக்கு சென்றனர். மேலும் அந்த பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகையை நட முயற்சி செய்தனர்.

இதனைக்கண்ட பொது மக்கள் ஆவேசத்துடன் அங்கு வந்து கோவில் ஊழியர்களை முற்றுகையிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு திடீரென கைகலப்பானது.

அப்போது கோவில் ஊழியர்களான பொன்னையா, சதன் திருமலை குமார் உள்பட 3 பேரை கட்டையால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சரமாரியாக தாக்கினர்.

இதில் காயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட் டது.

இது குறித்து தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் செயல் அலுவலர் பொன்னி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஊழியர்களை தாக்கியதாக குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுடலை (வயது 45), பசுங்கிளி, கணேசன், வெங்க டேஷ் மற்றும் வடக்கு நன்னகரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே அரசு ஊழி யர்கள் தாக்கப்படும் காட் சியை அப்பகுதியில் நின்றவர் கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *