தென்காசி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி தர்ணா செய்தவர் மீட்பு
1 min read
Man who staged a sit-in protest by climbing into an overhead water tank near Tenkasi rescued
தென்காசி அருகே உள்ள
நாட்டார்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்ட முதியவரை தென்காசி தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 70). இவருக்கு மனைவி, இரு மகன்கள், மற்றும் இரு மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியரில் வசித்து வருகிறார்கள்
ராஜேந்திரன் தனது மனைவியுடன் நாட்டார்பட்டியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை நாட்டார்பட்டி – திரவிய நகர் சாலை பகுதியில் துணை சுகாதார நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மேல் திடீரென ஏறி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்த ராஜேந்திரனிடம் பத்திரமாக கீழே இறங்கி வருமாறு கேட்டுக் கொண்டனர் . அதை அவர் ஏற்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தென்காசி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிர தீப்குமார், சிறப்பு நிலைய அலுவலர் கணேசன், தீயணைப்பு படைவீரர்கள் சாமி, விஸ்வநாதன், கோமதி, சங்கர், அமல்ராஜ் ஆகியோர் வேகமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ராஜேந்திரனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அவரி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இதில் அவருக்கும், பக்கத்து வீட்டுகாரருக்கும் தண்ணீர் செல்வ தில் ஏற்பட்ட தகராறுக்கு தீர்வு காண வலியுறுத்தி இவ்வாறு மேல் நிலை நீர்த்தேக்கத் தொட் டில் ஏறி தர்ணாவில் ஈடு பட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து ஆலங்குளம்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிளாஸ்டன் ஜோஸ், பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வகு கின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.