June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

“காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் தளம்” மோடி பேச்சு

1 min read

“Kashi Tamil Sangam is a platform for loving Tamil language” Modi’s speech

30.11.2025
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. நான் காசி தமிழ் சங்கமம் பற்றிப் பேசுகிறேன். 4-வது காசி தமிழ் சங்கமம் வருகிற 2-ந் தேதி வாரணாசியில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. அது தமிழ் கற்க என்பதாகும்.

காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சிறந்தது. தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பாரதத்தின் பெருமை.

இளைஞர்களின் அர்ப்பணிப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பு வளர்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்

வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, மத்திய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம் மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது ஆகியவை இந்த மாதத்தில் நடந்த உத்வேககரமான முன்னேற்றங்களில் அடங்கும்.

தேன் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருவதாக பிரதமர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் தேன் உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தேன் ஏற்றுமதியும் மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. தேன் உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ், காதி கிராமோத்யாக் சார்பில் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் உலகின் மிகப் பெரிய இன்ஜின் எம்.ஆர்.ஓ வசதியைத் தொடக்கி வைத்தேன்.
357 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. விவசாய துறையில் இது பெரிய மைல்கல். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மும்பையில் ஐஎன்எஸ் மாஹே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. விளையாட்டு துறையில், உலகில் இந்தியா மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டவுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியா நடத்தும் என்று அவிக்கப்பட்டது. இந்த சாதனைகள் தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் சொந்தமானது.

இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *