June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நூறாடு கண்ட இலங்கை வானொலி

1 min read

Hundred continent Sri Lanka Radio

22.12.2025
நம் நாட்டில், ‘ரேடியோ சிலோன்’ என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இலங்கை வானொலி சேவை நுாற்றாண்டை நிறைவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், 1925 டிச., 16ல், இலங்கை வானொலி சேவை துவங்கப்பட்டது. இது, ஆசியாவின் முதல் வணிக குறுகிய அலை வானொலி நிலையம். இந்த வானொலி சேவை, 1949 அக்., 1ல், ‘ரேடியோ சிலோன்’ என, மறுசீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, 1967 ஜன., 5ல், ‘இலங்கை ஒலிபரப்பு கூட்டமைப்பு’ என, பெயர் மாற்றப்பட்டது.

இலங்கை வானொலியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பதிவு செய்யப்பட்ட பாடல்களின் நுாலகமே உள்ளது.

இதில் நம் நாட்டில் கூட கிடைக்காத அரிய ஹிந்தி பாடல்களும், உலகத் தலைவர்களின் குரல் பதிவுகளும் தனித்துவமான சேகரிப்புகளாக உள்ளன. இலங்கை வானொலியில், மறைந்த இந்திய வானொலி அறிவிப்பாளர் அமீன் சயானி தொகுத்து வழங்கிய, ‘பினாகா கீத்மாலா’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். வசீகரக் குரலுக்கு சொந்தக்காரரான அவர், 1952 – 1988 வரை அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அன்றயை கால கட்டத்தில் எந்தப் பாடல் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இத்தகயை சிறப்புகளை பெற்ற இந்த வானொலி சேவை, தற்போது நுாற்றாண்டை நிறைவு செய்துள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தற்போது சேவைகளை வழங்கி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *