தென்காசி மாவட்டத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு 300 பேர் தேர்வு
1 min read
300 people selected for Agnipath project in Tenkasi district
24.12.2025
இந்திய ராணுவத்திற்கு அக்னிபத் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கு அக்னிபத் திட்ட மூலம் ஆள் சேர்க்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது அதன்படி கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் மூன்று நிலைகளிலும் வெற்றி பெற்ற வீரர்களை ராணுவத்தில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தென் மாவட்டங்களில் சுமார் 1340 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 பேர் தேர்வு பெற்று இருப்பது தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
மேலும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ஜெய்சீவன் இராணுவ பயிற்சி அகாடமி என்னும் பெயரில் சிவன் மாரி என்ற முன்னாள் ராணுவ வீர நடத்தி வரும் அகாடமியில இருந்து மட்டும் சுமார் 240 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது அந்த பயிற்சி மையத்தில் பயின்ற அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதைஅறிந்த தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டமக்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்களும் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் அந்தத் திட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். அதன்படி கடையநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் இளைஞர்கள் அக்னிபத் திட்டம் மூலம் இராணுவத்தில் சேர்ந்துள்ள மகிழ்ச்சி சமூக வலைத்தளவாசிகளும் தென்காசி மாவட்டம் மக்களும் கொண்டாடி வருகின்றனர் செல்லும் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது .