June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் செல்லம்மாள் பாரதியின் பிறந்தநாள் விழா

1 min read

Chellammal Bharathi’s birthday party at Kadayam

3.1.2026
மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் கடையம். தென்காசி மாவட்டத்தில் இருக்கும் இவ்வூர் கிளை நூலத்தில் உள்ள செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் செல்லம்மாளின் பிறந்தநாள்விழா இன்று(3.1.2026) மாலை நடந்தது. சேவாலயா நிறுவனர் முரளிதரன் ஆலோசனையின் பேரில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா கல்யாணராமன் தலைமை தாங்கினார். நூலகர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

கடையம் பாரதி வாசகர் வட்டத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம், ஆழ்வார்குறிச்சி நூலகர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள. கடையம் திருவள்ளுவர் கழகச் செயலாளர் கே.எஸ்.கல்யாணிசிவகாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். அவர் கூறும்போது செல்லம்மாள் பாரதிக்கு முதன்முதலாக கடைத்தில்தான் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றார்.
கடையம் சேவாலயா கலைக்கூடம் இசை-நடன ஆசிரியர் சுமதி வரவேறார். ரவணசமுத்திரம் சேவாலயா ஜெசுதா நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *