இலஞ்சியில் 343 கிலோ புகையிலைப் பொருள் – ஒருவர் கைது
1 min read
343 kg of tobacco seized in Lanji – One arrested
6.1.2026
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியில் 2.43 லட்சம் மதிப்பிலான 343 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பகுதியில்
ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக குற்றாலம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இலஞ்சி ராமசாமி பிள்ளை தெருவில் வசித்துவரும் ரவி என்ற ரவிராஜ் பாண்டியன் (வயது 45) என்பவரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர்.
அவரது வீட்டில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். ராமசாமி பிள்ளை தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூபாய் 243 லட்சம் மதிப்பிலான 343 எடை உள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைக் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரவி(எ) ரவிராஜ் பாண்டியனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி குற்றாலம் போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.