August 24, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை அருகே பைக் மீது கனரக வாகன மோதி இளைஞர் பலி

1 min read

Youth dies after being hit by heavy vehicle on bike near Surandai

13.1.2026

தென்காசி மாவட்டம் வீரகேரளபுதூர் தாலுகா அருகே உள்ள கலிங்கப்பட்டி சாலையில் வாடியூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது கனரகவாகனம் லாரி மோதி ஒரு இளைஞர் பலியாகி உள்ளார் .

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அருகே உள்ள கலிங்கப்பட்டி சாலையில்தொடர்ந்து விபத்து நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. தொடர்ந்து பலர் பலியாகி உள்ளனர் மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் உடனடியாக அந்த இடத்தில் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்ட இடங்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

இல்லையென்றால் மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் தொடர்ந்து சுரண்டை பகுதியில் கனரக லாரிகள் மோதி விபத்து அதிகளவில் தொடர்ந்து வருகிறது.

ஏற்கனவே சுரண்டை கவுன்சிலர் குடும்பத்தினர் மூன்று பேர் சுரண்டை பகுதியில் கனரக வாகனம் மோதி பலியாகினார் என்பது குறிப்பிடத்தக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *