June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

1 min read

John Pennyquick’s Birthday – M.K. Stalin’s Tribute

15.1.2026
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது”

  • என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக, தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!

முல்லைப் பெரியாறு அணையினைப் பெருமுயற்சியோடு கட்டி, அப்பகுதி மக்களின் பஞ்சம் – பசி நீக்கிய பென்னிகுவிக் பெருமகனாரின் குடும்பத்தினரைக் கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது சந்தித்திருந்தேன்.

பென்னிகுவிக்கின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு அவர்களே நம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள செய்தி கண்டு மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *