June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

1 min read

Power outage in Nellai and Tenkasi the day after tomorrow

18.1.2026

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (20.1.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதன்படி மேலப்பாளையம், கொட்டிகுளம்பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரிரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர்தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி.

ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி.

பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ.காலனி, மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திசையன்விளை, வள்ளியூர், கோட்டைகருங்குளம் மற்றும் விஜயாபதி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (20.1.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வரும் நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கரைசுத்துஉவரி, கூட்டபணை, கூடுதாளை, குட்டம், விமணங்குடி.

வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி.

கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம்.

கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (20.1.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர்.

வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *