கனிமவள வாகனங்களை கட்டுப்பாடு விதிக்க கோரி ஆட்சியரிடம் மனு
1 min read
Petition to the Collector seeking restrictions on mineral vehicles
27.1.2026
கனிமவள வாகனங்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் பொதுமக்களை அச்சுறுத்தும் நேரத்தில் செல்லும் ஆபத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்ற கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடம் கனிமவள வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வது குறித்து மனு ஒன்றை அளித்துள்ளார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது
நமது தென்காசி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவது பொது மக்களிடையே மிகுந்த கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, மலைகள் அளிக்கப்பட்டு நமது இயற்கை வளம் சூறையாடப்படுவதை இங்கு உள்ள மக்கள் யாரும் விரும்பவில்லை என்பதை யாரும் அரசு உணராமல் லாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது
தினமும் கனிமவள வாகனங்களுடன் கேரளாவை நோக்கி அணிவகுத்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுபத்தி வருகின்றனர் பீக் ஹவர்ஸ் எனப்படும் பரபரப்பான மணி நேரங்களிலும் கட்டுப்பாடே இல்லாமல் இடைவிடாமல் இயக்க அனுமதிக்கப்படும் கனரக லாரிகளால் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்களை எடுத்துச் செல்வதும் லாரிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் பலர் காயமடைந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்
ஏற்கனவே பலமுறை அதிமுக சார்பில் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகத்தால் குவாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் நேர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வலியுறுத்தி கூட்டம் நடத்தப்பட்ட பின்பும் அது முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்பதை தங்கள் கவனத்தில் கொண்டு வருவதோடு மேற்படி கனிம வளங்களை வாகனங்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் லாரியை அனுமதித்தும் கேரளாவில் இருந்து லோடு இல்லாமல் வரும் (EMPTY) லாரிகளையும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.