நெல்லையில் 9-வது பொருநை புத்தக திருவிழா-12-ந் தேதி தொடங்குகிறது
1 min read
9th Porunai Book Festival in Nellai begins on 12th
6.2.2025
நெல்லையின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 9வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா வருகிற 12 ந்தேதி தொடங்கி 22ந்தேதி வரை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற உள் ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 115 முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்த புத்தகத்திருவிழாவில் இலக்கியம், போட்டித்தேர் வுகள் சுயமுன்னேற்றம் மற் றும் ஆங்கில நூல்கள் என அனைத்து தரப்பினருக்கு மான நூல் அரங்குகள் அமைய உள்ளன.
புத்தகங்களோடு மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறிவியல் நிகழ்வுகள், பழங்காலப் பொருட்கள், ஓவியம், இயற்கை விளைபொருட்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் என பல்வேறு கண்காட்சிகள் புத்தக திருவிழா வளாகத்துக்குள்ளேயே தனித்தனி அரங்குகளில் நடைபெற உள்ளன.
நெல்லையின் நவீன நகரங்கள் முதல் கிராம பஞ்சாயத்துக்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் புத்தகங்கள் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தலைசிறந்த இலக்கிய ஆளுமைக ளின் சிறப்புரைகள் நிகழ உள்ளன.
இந்த புத்தகத்திருவிழா நடைபெறுவது குறித்து பொதுமக்கள் மற்றும் மாண வர்களிடையே கொண்டு செல்வதற்காக மாநகராட்சி வர்த்தக மையத்தில் 100 அடி சுவருக்கு 100 மாணவர்கள் மூலம் புத்தகம் வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகள், புத்தகம் வாசிப்பதன் அவசியம் போன்றவை குறித்து சுவர் ஒவிய விளம்பர விழிப்புணர்வு பணிகளை ஒயில் ஆட்டம், மரக் கால் ஆட்டம், குதிரை ஆட்டம், பறை இசை, மயில் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆர். டி.ஒ.பிரியா. மாநகராட்சி மண்டல கமிஷனர் மகாலெட்சுமி, நெல்லை தாசில்தார் சந்திரகாசன், ஒருங்கிணைப்பாளர் சபேசன், சேரன்மகாதேவி கவின் கலை கழகத்தின் ஆசிரியர் மாரியப்பன், கலைமாமணி சந்திரபுஷ்பம், முனைவர் சங்கர் குழுவினர், அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற் றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.