பா.ஜ.க, நிர்வாகி அதிரடி நீக்கம்
1 min read
BJP, executive removed
8.2.2026
தமிழக பா.ஜ.க,வில், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில அமைப்பாளராக, சென்னை ராஜா என்பவர் உள்ளார். இவரை, கட்சி பொறுப்பில் இருந்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜா , மாநிலத் தலைமையின் அனுமதி இல்லாமல், கட்சியின் விதி முறைகளுக்கு மாறாக, மத்திய அரசின் நலத்திட்ட பிரிவுக்கு, மாநிலச் செயலர்களை நியமித்துஉள்ளார். அந்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட நியமனங்கள், குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. எனவே, கட்சி பொறுப்பில் இருந்து, ராஜா தற்காலிகமாக நீக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.