June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளா செல்லும் கனிமவள வாகனங்களை நிறுத்த எம்எல்ஏ. கவன ஈர்ப்பு தீர்மானம்

1 min read

MLA to stop mineral transport vehicles going to Kerala. Resolution to draw attention in the Assembly

20.2.2026
கேரளா செல்லும் கனிமவள வாகனங்களை நிறுத்துவதற்கு தமிழக சட்டமன்றத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ண முரளி கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்துள்ளார்

தமிழக சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடர் கதையாகி உள்ளது

அதனை தடுத்து நிறுத்தும் விதமாக தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற பேரவை தலைவரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் : சட்டமன்ற பேரவை செயலக விதி 55 இன் கீழ் கீழ்காணும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் கவனத்தை ஏற்கும் வகையில் தென்காசி மாவட்டத்திலிருந்து விதிகளுக்கு அப்பாற்பட்டு தினமும் பல நூற்றுக். கணக்கான லாரிகள் மூலம் பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *