June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினம்

1 min read

International Mother Language Day at Avudaiyanur School

23.2.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள
ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி அருட்திரு அந்தோனி அ குருஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சே. அந்தோணி அருள் பிரதீப் வரவேற்றார். சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கீழப்பாவூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீ மூலநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சங்கர சுப்பு, பள்ளி நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், உதவித் தலைமை ஆசிரியர்கள் சகாயராணி, சாந்தி, ஆசிரியர்கள் ரஞ்சனி, மேரி ஜனா, அந்தோனி, பெஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியர் கேத்தரின் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *