மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்-ஔவை ஆசிரம மாணவர்களுக்கு உணவு
1 min read
Food for M.K. Stalin’s birthday – Aavai Ashram students
3/3/2026
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கடையம் மேற்கு ஒன்றிய திமுகவினர் சிவசைலம் ஔவை ஆசிரமதிலுள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 73வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் காந்தி கிராம அறக்கட்டளையின் அங்கமான ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலத்தில் அமைந்துள்ள ஔவை ஆசிரமத்திலுள்ள
நுண்ணறிவுத்திறன் குறையுடயோர், செவித்திறன் குறையுடயோர் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் சாந்தி செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 250 மாணவ மாணவியருக்கு கடையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் ஏற்பாட்டில் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி பெருமாள், சிவசைலம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கரபாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளர் சதாம் உசேன், மகேஷ், ஜெயராஜ், இளையராஜா, ரவி, மாரியப்பன் கணேசன், சுப்பையா, பாலசுப்பிரமணியன், முருகன், நூருல் அமீர், முருகன், பாலசுப்பிரமணியன், திருப்பதி ராஜா, காதர், ராஜன்
மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.