June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக முத்தமிழ் விழா

1 min read

Kadayam Thiruvalluvar Kazhagam Muthamizh Festival

7.3.2026
கடையம் திருவள்ளுவர் கழக நிறுவநர் பேராசிரியர் அறிவரசன்(குமாரசாமி) அவர்களின் நினைவு நாளையொட்டி முத்தமிழ் விழா இன்று(சனிக்கிழமை) கடையம் கே.எஸ்.எஸ். சிற்றரங்கில்நடந்தது. திருவள்ளுவர் கழகத்தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார்.முதலில் அறிவரசன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ம.தி.தா. இந்துகல்லூரி வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் முனைவர் ஆ.திருநீலகண்டன் இயல் தமிழ் பற்றி பேசினார்.
கொட்டாங்குளம் ஜெயபாலன், ஜெயபாபு மெல்லிசையாக நாதசுவரம் இடம்பெற்றது.
சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மைய மாணவியரின் பரத நாட்டிய கலைநிகழ்ச்சி நடந்தது.


முன்னதாக சங்கரகோமதி என்ற பிரியா குறள் சிந்தனை கூறினார். இந்திரஜித் வரவேற்றார். ஆசிரியர் கோபால் நினைவுப்பரிசு வழங்கினார்.
திருவள்ளுவர் கழக செயலாளர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு, நன்றியும் கூறினார்.
விருந்து ஏற்பாடுகளை த.குமரேசன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *