June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்களை வீழ்த்திய அமெரிக்கா

1 min read

US destroys 16 Iranian minesweepers

11.3.2026
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. நேற்று 12-வது நாளாக நீடிக்கும் இப்போரில் இருதரப்பும் தாக்குதல்களை தொடர்ந்தது.

இதில், ஈரான் ராணுவ உள்கட்டமைப்புகள், போர்க் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஈரானின் 44 போர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இந்த நிலையில் கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா ராணுவம் அறிவித்து உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 16 கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் உள்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்து உள்ளதாக அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு அறிவித்து உள்ளது. மேலும், கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.

உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தவறினால் முன்பு கண்டிராத அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் 16 கண்ணிவெடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஈரான் மீது இஸ்ரேல் நேற்று கடுமையான வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதில் தலைநகர் தெக்ரானில் உள்ள ஒரு வங்கி கட்டிடம் மீது குண்டு வீசப்பட்டது. மேலும், ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கினர்.

அதேபோல் இஸ்பஹான் உள்பட ஈரான் முழுவதும் தாக்குதல்கள் நடந்தன. இஸ்பஹான் நகரில் நடந்த தாக்குதலில் அங்குள்ள ரஷிய துணை தூதரகம் சேதம் அடைந்தது.

இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரான் தனது பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. நேற்று அதிகாலை இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை ஈரான் வீசியது.

இந்த பல அடுக்கு தாக்குதல்களில் கோ ரம்ஷஹர் ஏவுகணைகளை பயன்படுத் தியதாகவும், இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கே உள்ள ஹேலா செயற் கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தையும், பீர் யாகூப், மேற்கு ஜெருசலேம் மற்றும் ஹைபாவில் உள்ள ராணுவ தளங்களையும் 2-வது முறையாக குறிவைத்து தாக்கியதாக ஈரான் தெரிவித்து உள்ளது.

அதேபோல் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஈரானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணை களை இடைமறித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. சவுதி அரேபியாவில் உள்ள சுல்தான்விமான தளத்தை நோக்கி ஏவப்பட்ட 6 ஏவுகணைகளையும், நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரு ஏவு கணையும் இடைமறிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சவுதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த 5 டிரோன்கள் அழிக்கப்பட்டன. குவைத்தில் உள்ள கேம்ப் அரிப்ஜான் அமெரிக்க தளத்தை குறிவைத்து 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. பக்ரைனில் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஈராக்கின் பாக்தாத் அருகே அமெரிக்க தூதர்கள் தங்கியிருந்த ஒரு தளத்தை ஈரான் டிரோன் தாக்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *