June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை: விபத்தில் இறந்தவர் குடும்பத்தற்கு வழப்பீடு கோரி கலெக்டரிடம் மனு

1 min read

Surandai: Petition to the Collector seeking compensation for the family of the deceased in the accident

12/3/2026

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் இவர் திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு சுரண்டை அண்ணா சிலை அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சுரண்டை காவல் இவர் நிலைய ஆய்வாளரின் வாகனத்தை ஓட்டுநர் இசக்கிமுத்து காவலர் என்ற ஓட்டி வந்துள்ளார் அவர் கவனக் குறைவாகவும் அதிவேகமாகவும் வந்து சுப்பிரமணியனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக சுப்பிரமணியன் உயிரிழந்து உள்ளார்

அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் என அனைவரும் உயிரிழந்த சுப்பிரமணியன் மனைவி மகேஸ்வரிக்கு அரசு உரிய இழப்பீடுபெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து சுப்பிரமணியன் உடலை வாங்கி இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.

சுப்பிரமணியன் இறந்து தற்போது 2 ஆண்டுகள் ஆகியும் எந்த விதமான இழப்பீடு அரசு வேலை எதுவும் தரவில்லை எனக்கு 10 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர் இரண்டு குழந்தைகளுடன் வேறு வருவாய் இன்றி வேலை வாய்ப்புகளும் இல்லாமல் தான்மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்ந்து வருவதால் எனக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் உயிரிழந்த சுப்பிரமணியனின்மனைவி மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் விரைவில் உரிய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *