தென்காசி: 60 மாணவிகள் நெல்லை பொருநை அருங்காட்சியம் பயணம்
1 min read
Tenkasi: 60 students visit the Nellai Porunai Museum
12/3/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (11.03.2026) சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்” கீழ் மாவட்ட மகளிர் மகளிர் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடர் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் 60 மாணவிகளை ஒரு நாள் கல்விச் சுற்றுலாவாக திருநெல்வேலி பொருநை அருங்காட்சியத்திற்கு அழைத்து செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர், வழி அனுப்பி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்” கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையம் மூலமாக ஆதிதிராவிடர் நல அலுவலக சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் 60 மாணவிகள் தமிழ்நாட்டின் நாகரீகத்தின் பெருமையை போற்றும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளார்கள்.
இச்சுற்றுலாப் பயணம் மாணவிகளுக்கு தமிழரின் நாகரீகங்களை அறிந்து கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்
சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விஜயா, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி. மதிவதனா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) அழகுராஜா மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.