தென்காசியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
1 min read
Flag parade on behalf of the police in Tenkasi
12/3/2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், நேற்று (11.03.2026) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் , 06 காவல் ஆய்வாளர்கள், 08 சார்பு ஆய்வாளர்கள், 40 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர், 103 காவலர்கள் இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு துவங்கிய இந்த அணிவகுப்பு சுவாமி சன்னதி பஜார், மவுண்ட் ரோடு, கீழப்புலியூர் , மேலப்புலியூர் , கொடிமரம், பொன்னிப்பாறை தெரு, ஒப்பனை விநாயகர் கோவில், தங்கப்பாண்டியன் சிக்னல், யானை பாலம் சிக்னல் வழியாக தென்காசி பழைய பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.