June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமை விருது- ஆட்சியர் வழங்கினார்

1 min read

Green Award presented by the Collector in Kanyakumari District

14.3.2026-
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஆர்.ஸ்டாலின், முன்னிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலையினை வழங்கினார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு
தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரியம் மூலம் பசுமை சாம்பியன் விருதினை 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம்
வீதம் பண முடிப்பு வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த T.ஜெகதீசன் அவர்களுக்கும், இயற்கையே இறைவன் பனை விதைப்பு குழு மற்றும் ஒற்றையால்விளை அரசு
மேல்நிலைப்பள்ளிக்கும் 2025-ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.1
லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களை மனதார பாராட்டுகிறேன்.
இன்னும் இதுபோன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த
கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நெல்லைமதி, துறைஅலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *