நெகிழி இல்லா குற்றாலம் விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டம்
1 min read
Plastic-free Courtallam Awareness Mini Marathon Series
14/3/2026
தென்காசி வனக்கோட்டம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களை காக்கும் நோக்கில் “நெகிழி இல்லா குற்றாலம்” விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் நெகிழி இல்லா குற்றாலம் விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் விலக்கு பகுதியில் நேற்று (14.03.2026) தென்காசி வனக்கோட்டம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களை காக்கும் நோக்கில் “நெகிழி இல்லா குற்றாலம்” விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன், மாவட்ட வன அலுவலர் முனைவர். ரா.ராஜ்மோகன், ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியினை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களை காக்கும் நோக்கில் “நெகிழி இல்லா குற்றாலம்” விழிப்புணர்வு மினி மாரத்தான் தொடர் ஓட்டம் தென்காசி வனக்கோட்டம் சார்பில் நடைபெற்றது. இதன் நோக்கம் சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது. குரங்குகளுக்கு உணவு வழங்காதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அரிய வன உயிரினமான தங்க குள்ள நரி (Golden Jackal) போன்ற விலங்குகளை பாதுகாப்பது. குப்பைகளை சரியான முறையில் அகற்றுதல் மற்றும் சுத்தமான குற்றாலத்தை உருவாக்குவது தான்.
10 கி.மீ நடைபெற்ற மினி மாரத்தான் பராசக்தி மகளிர் கல்லூரி மேல் புறம் அமைந்துள்ள பழைய குற்றாலம் சாலை முகப்பில் இருந்து தொடங்கி. குடியிருப்பு, நன்னகரம், மின் நகர், வள்ளியூர், இலஞ்சி, சிலுவைமுக்கு, வாஞ்சி நகர், காசிமேஜர்புரம் வழியாக குற்றாலம் பிரதான அருவி வந்தடைந்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு நெகிழி இல்லா குற்றாலத்தினை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மினி மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.
இத்தொடர் ஓட்டத்தில், ஆடவர். பெண்கள் பிரிவுகளில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ். வனச்சரக அலுவலர்கள் ஆறுமுகம். செல்லத்துரை, கதிரவன், கனகராஜ், சீதாராமன், கந்தசாமி. முனிரத்னம். பசுமைத் தோழர் (தென்காசி) பெரோலின் ஜெசினா. மற்றும் வன அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள். அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.