கடையநல்லூர் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
1 min read
Collector inspects polling stations in Kadayanallur constituency
14/3/2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அரசு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க. வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு தென்காசி மாவட்டம். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியரை அரசு மேல்நிலைப்பள்ளி இலத்தூர் லெட்சுமி ஹரிஹர உயர்நிலைப்பள்ளி, மேலச்செங்கோட்டை உயர்நிலைப்பள்ளி, ஆய்க்குடி மேல்நிலைப்பள்ளி, சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தேர்தல் பணிக்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நம்பிராயர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடேஷ்ஐயர், பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.