தென்காசி: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,699 வழக்குகள் தீர்வு
1 min read
Tenkasi: 1,699 cases resolved in the National People’s Court
14/3/2026
தென்காசி மாவட்டத்தில்; நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8.43 கோடி மதிப்புள்ள 1,699 வழக்ககள் தீர்வு காணப்பட்டது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின் பேரில் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தென்காசி மாவட்ட நீதிமன்றம் உட்பட 4 தாலுகா நீதிமன்றங்களில் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்களாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதியும் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பி. ராஜவேல் தலைமையில் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் முருகவேல் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெ. கிறிஸ்டல் பபிதா , முதன்மை சார்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி எஸ்.முத்துலட்சுமி மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜ21:12இ 14ஃ03ஃ2026ஸ Pழளெயபரவொயடய ஊழரசவ டுநபயட யுனை டீ: அதில் தென்காசி மாவட்டம் முழுவதுமாக மொத்தம் ரூபாய் 68547523 மதிப்புள்ள 1513 நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கும் ரூபாய் 15837953 மதிப்புள்ள 186 நீதிமன்ற முன் வழக்குகளுக்கும் தீர்வு
நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி.ராஜவேலு தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார், முதன்மை சார்பு நீதிபதி பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி முருகவேல்இ முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முத்துலட்சுமி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கியாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனத்தினர், வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் முழுவதுமாக மொத்தம் ரூ. 6 கோடியே, 85 லட்சத்து, 47 ஆயிரத்து, 523 மதிப்புள்ள 1,513 நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கும் ரூ. 1 கோடியே 58 லட்சத்து, 37 ஆயிரத்து 953 மதிப்புள்ள 186 நீதிமன்ற முன் வழக்குகளுக்கும் ஆக மொத்தம் ரூ.8 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து, 476 மதிப்புள்ள 1,699 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.