June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: காவல் துறை மூலம் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் ஏலம் ரத்து

1 min read

Tenkasi: Auction of 202 unclaimed vehicles cancelled by police department

17/3/2026

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும் 3 மூன்று சக்கர வாகனங்களும் 2 நான்கு சக்கர வாகனங்களும் சேர்ந்து மொத்தம் 202 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் வருகின்ற 23.03.2026 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 3.00 மணிவரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற இருந்தது.

தற்சமயம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருவதால், ஏலதாரர்கள் பணத்தை ரொக்கமாக கொண்டு வருவதில் இருக்கின்ற சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் மேற்கண்ட வாகனங்களுக்கான ஏலம் மற்றொரு தேதியில் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *