June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

இடைகால் அருகே தென்மரம் தீப்பிடித்து எரிந்தது

1 min read

A coconut tree caught fire near the footpath.

18.3.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரத்திலிருந்து இடைகால் செல்லும் சாலையில் வேலப்ப நாடானூர் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்த தென்னைமரத்தில் தீப்பிடித்து எரிந்தது.

இடைகால் – சேர்ந்தமரம் சாலையில்
வேலப்பநாடாரூர் விலக்கு அருகில் உள்ள தோட்டத்தில் தென்னை மரத்தில் மின்சார வயர் உரசி செல்வதால் தற்போது பெய்த இடி மின்னல் காற்று மழையால் மின்கசிவு ஏற்பட்டு தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

ஆனாலும் அந்த பகுதியில் மழை தொடர்ந்து பெய்ததால் தீ தானாகவே அனைந்தது. இதனால் அந்த தீ மரம் முழுவதும் எரியாமல் மேலும் மற்ற மரங்களுக்கும் தீ பரவாமல் அணைந்தது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *