June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

இடைகால் பகுதியில் ரயிலில் அடிபட்டு பெண் பலி

1 min read

Woman dies after being hit by train in Idakal area

18.3.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒரு பெண் பலியானார்.

கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் ரயிலில் அடிபட்டு பெண் பலியானார்.இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆய்க்குடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும்
ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் செங்கோட்டை பகுதியை சேர்ந்த மாரியம்மாள்(வயது 48) என்பது தெரியவந்துள்ளது.

அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *