June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 5 தொகுதி களின் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வுக்கூட்டம்

1 min read

Election observers from 5 constituencies hold review meeting in Tenkasi

19.3.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 முன்னிட்டு தேர்தல் தொடர்பாக அலுவலர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தென்காசி மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நிரஜ்குமார். (கடையநல்லூர். தென்காசி), கிருஷ்ண குமார் சிங். (சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர்). .இஷாபிரியா, சுஷாந்த்குமார்சக்சேனா, அசோக்கௌதம், அபய்காந்த்தாஸ். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர். ஆகியோர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து தென்காசி மாவட்டத்திற்கென பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தினை தென்காசி மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு. செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். மாவட்ட 5 சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள். வட்டாட்சியர் (தேர்தல்) சண்முகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *