தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
1 min read
Tenkasi North District AIADMK Executives Consultative Meeting
19.3.2026
தென்காசி வடக்கு மாவட்டம் செங்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கண்ணன் என்ற ராஜூ, கழக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமிபாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவஆனந்த், மாவட்ட கழக அவைத்தலைவர் விபி மூர்த்தி இணை செயலாளர் சண்முகப்ரியா துணை செயலாளர்கள் பொய்கை சோ மாரியப்பன் சகுந்தலா பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் செ. கிருஷ்ணமுரளி கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இதுவரை பணியாற்றிய வேகத்தை விட இனி வேகமாக பணியாற்ற வேண்டும், வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கு முன்பே பிரச்சார பயண திட்டம், பிரச்சார வாகனங்கள், சுவர் விளம்பரங்கள், உள்ளிட்ட பல பணிகளை இன்றே துவக்கிட வேண்டும், தேர்தல் தொடர்பாக அனுமதி பெறுவது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள செயலி மூலம் 48 மணி நேரத்திற்கு முன் பெற வேண்டும் எனவே அதற்காக தயார் ஆகி கொள்ள வேண்டும், பூத் செயலாளர்கள் மற்றும் கமிட்டியினர்களிடம் அவர்களுக்கான பணிகளை துவக்க வைத்திட வேண்டும்,
தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தர கூடிய பொதுச்செயலாளருக்கு சிறப்பாக வரவேற்க வேண்டும், மாவட்ட சார்பு அணி கூட்டம் ஒவ்வொன்றாக நடைபெற உள்ளது அது சம்பந்தமான பட்டியல் வழங்கப்பட்டுள்ளது அதன்படி அணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், விருப்பு வெறுப்பு இல்லாமல் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அவர்களுடன் இணைந்து களப்பணியை செய்திட வேண்டும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்காக அகற்றப்பட்ட பொம்மை முதல்வர் படங்கள் இனி தமிழகம் முழுவதும் எங்குமே வெளிவராத வகையில் செய்திட வேண்டும், காபந்து அரசாக உள்ள திமுகவை காலி பந்து அரசாக மாற்ற அனைவரும் ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம் விடியா ஆட்சிக்கு விடை சொல்வோம் பொதுச்செயலாளர் முதலமைச்சராவது 100% உறுதி இதை மாற்ற யாராலும் முடியாது என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் கிருஷ்ணன் என்ற கிட்டுராஜா, ராமசாமி என்ற ரவி, சந்திரன், சத்யா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், வாவைஜாஹீர்உசேன், பரமகுருநாதன், டாக்டர் திலீபன், மகாதேவன், குட்டி மாரியப்பன், குருசேவ் ,செந்தில்குமார், மதன், சங்கரசுப்பிரமணியன், தீக்கனல்லெட்சுமணன், ராமர்பாண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்ஆர் ராமசந்திரன், டாக்டர் சுசீகரன், பெரியதுரை, வேல்முருகன் குருக்கள்பட்டி செல்வராஜ், வழக்கறிஞர் துரைபாண்டியன் பொன்முத்துவேல்சாமி ரமேஷ் சம்சிகாபுரம் ரவிச்சந்திரன், தேவராஜ் ராமதுரை, அடைக்கலாபுரம் செல்வராஜ், ராஜாராம் பாண்டியன், ஜெயகுமார், முத்துபாண்டியன், நகர கழக செயலாளர்கள் கணேசன், சங்கரபாண்டியன், எம்கே முருகன், பேரூர் கழக செயலாளர்கள் முத்துகுட்டி, அலியார்,பாலசுப்பிரமணியன், நல்லமுத்து, மாடசாமி, சுதாகர், சேவகபாண்டியன், முனியராஜ், கார்த்திக்ரவி, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.