தென்காசி – கொல்லம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
1 min read
Tenkasi – Kollam District Election Officers Consultation Meeting
25.3.2026
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று (25.03.2026) இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியினை தீவிரப்படுத்து வது தொடர்பாக காவல்துறை, வனத்துறை. கலால் ஆயத்தீர்வைத்துறை ஆகிய அலுவலர்களுடன் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும்மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர், கொல்லம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான என்.தேவிதாஸ். ஆகியோர் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில். கேரளம் மாநிலத்திற்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் 09.04.2026 அன்றும், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23.04,2026 அன்றும் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இரு மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திடவும், சட்டவிரோத செயல்பாடுகளை தவிர்க்கும் வகையில் இரு மாநில எல்கைப் பகுதியில் செயல்பட்டு வரும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். தனி வட்டாட்சியர் (தேர்தல்) சண்முகம். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுதா, தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த காவல் துறை அலுவலர்கள். வனத்துறை அலுவலர்கள் மற்றும் கலால் (ம) ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.