இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் – திமுக வாக்குறுதி
1 min read
DMK promises Rs. 8,000 coupon for housewives
29.3.2026
இல்லத்தரசி என்ற புதிய திட்டத்தின் மூலம், மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் கூப்பன் மூலம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மக்சி என வீட்டு உபயோக பொருட்கள் வாங்கலாம்.
ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ளலாம்.
வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் இந்த கூப்பன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.
தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.
‘10,000 புதிய பேருந்துகள், 5000 கோயில்களுக்கு குடமுழுக்கு, மூன்றாம் பாலினத்தவருக்கு விருது’ – திமுக தேர்தல் வாக்குறுதிகள்!
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அப்போது 2021-ல் கதாநாயகனாக இருந்த தேர்தல் அறிக்கை, இந்த முறை சூப்பர் ஸ்டாராக இருக்கும் என்று அவர் குஉயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும்வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாத உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 2030 ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காங்கள் நகரங்களிலும், தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்படும், அதன்மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பிடிக்கும் வகையில் திராவிட மாடலின் செயல்பாடுகள் அமையும்.
தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடியாக, இரண்டு மடங்கு ஆக்கப்படும்.
5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும். ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோயில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
சிறுபான்மையினர் தொழில் தொடங்க டேம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பு அளவு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்கும் வசதியோடு தரம்வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்.
மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வீட்டுவசதி, சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சீர் செய்யப்படும்.
அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கபடும்.
திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளோடு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வித்தொகை உயர்த்தப்படும்.
மொழிப்போராட்ட வரலாற்றை இளைஞர் தலைமுறையினர் அறிய நவீன நூலக வசதியோடு கூடிய காட்சிக்கூடம் பொள்ளாட்சியில் அமைக்கப்படும்.
நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும்.
தொழிற்சாலை அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்ல எளிதாக்கும் பொருட்டு, குழந்தைகள் காப்பகம் 1000 உருவாக்கப்படும்.
பல்வேறு துறைகளில் சிறப்புற பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் தொழில்தொடங்க டாப்செட்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.