தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
1 min read
Training for polling station officials in Tenkasi district
29.3.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில உள்ள சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்க ப்பதிவின்போது பணி மேற்கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள இன்று (28.03.2026) நடைபெற்று வரவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவின் போது பணி மேற்கொள்ளும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிவகுப்புகள் சங்கரன்கோவனில் கோமதியம்மாள் மெட்ரிக்குலேஷன் பளளி, புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரி, கபொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, தென்காசி M.K.V.K மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிமற்றும் ஆலங்குளம் சர்தார்ராஜாபொறியியல்கல்லாரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி அலுவலர்களான உங்கள் தேர்தல் பணி மகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது தேர்தல் நடத்தும் முழு பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஆகவே, பயிற்சியின்போது பெறப்படும் தகவல களை உள்வாங்கி தேர்தல் பணியினை சிறப்பாக பணி மேற்கொள்ளும் வகையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பயிற்சியின் பரோது ஏற்படுகின்ற சந்தேகங்களை கேட்டு, சரி செய்து சிறப்பான முறையில் தேர்தலை நடத்திடும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைஷ்ணவி பால், ராமச்சந்திரன், ராஜேந்திரன், பால்துரை, அனிதா மற்றும் உதவி தேர்தல் நடத தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்படபலர் உடனிருந்தனர்.