August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் ரத்து

1 min read

Vijay campaign cancelled in Villivakkam constituency

30/3/2026
சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பெரம்பூரை தொடர்ந்து கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தார்.

கொளத்தூரில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் விஜய் பேச்சை முடித்துக்கொண்டார்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்பே விஜய் வாக்கு சேகரித்தார்.

அசம்பாவிதம் தவிர்க்க போலீசார் அறிவுரையை ஏற்று 2 நிமிடங்களில் விஜய் பேச்சை முடித்துக்கொண்டார்.

பெரம்பூர், கொளத்தூரை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்யப்பட இருந்த நிலையில் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை, தவெக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்,” விஜய்க்கு சரியான பாதுகாப்பு கொளத்தூரில் கொடுக்கவில்லை.

விஜய் இன்னொரு நாள் தனியாக வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்வார்” என்றார்.

பெரம்பூரி்ல் விஜய் பேசியதாவது:-
தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளேன்.

நமது வீட்டு வாசலில் இருந்து அம்மாவிடம் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக எண்ணி பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன்.

பெண்கள் பாதுகாப்பு இல்லாத சட்டம்-ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்கு தீய கட்சி திமுக தான் காரணம்.

5 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்கு தீயசக்தி திமுக தான் காரணம்.

நமது பெண் பிள்ளைகள் இரவில் பாதுகாப்பாக கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தீயசக்தி திமுக ஆட்சியை தூக்கி எறிவோமா ?

5 வருடம் காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார் ஒரு அடிப்படை பாதுகாப்டையாவது கொடுத்திருப்பாரா?

திமுக கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களது காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.

திமுக கொடுக்கும் பணத்தை வாங்காமல் விடாதீர். வாங்கிக் கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *