பாஜக ஆளும் மாநிலங்களில் மீன் சாப்பிட தடையா?- திரிபுரா முதல் மந்திரி பதில்
1 min read
Is eating fish banned in BJP-ruled states? Tripura Chief Minister responds
30.3.2026
மேற்குவங்கத்தில் அடுத்த மாதம் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
புருலியா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சிக்கு வந்தால் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும். மக்கள் சாப்பிட கறி, கோழி, மீன் எதுவும் கடையில் கிடைக்காது. அவர்களுக்கு மக்களின் மதம், கலாசாரத்தின் மீது நம்பிக்கை கிடையாது என தெரிவித்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திரிபுரா முதல் மந்திரி மாணிக் சஹா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, மாணிக் சஹா கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மீன்கள் உணவாக சாப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மம்தாவின் கருத்து ஆதாரமற்றது. அதிக அளவில் மீன்களை பயன்படுத்தும் மாநிலமாக திரிபுரா உள்ளது என தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த அரசியல் விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் தீவிரம் அடைந்துள்ளன.