நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு கூட்டத்தில் தொழிலாளி சாவு
1 min read
Worker dies during election boycott rally near Nellai
9.4.2026
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தாதனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் காவு முத்து (வயது 50). இவர் அங்குள்ள ஒரு குவாரியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தாதனூத்து கிராமத்தில் சட்டமன்றத் தேர் தலை புறக்கணிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் வருவாய்த்துறையினர் தாதனூத்து கிராமத்திற்கு சென்று ஊர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் எதிராகவும் பேசினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவு.முத்துவை நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காவுமுத்து இருதய பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவு முத்துக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அவரை உதவினர்கள் பாளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காவு.முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது