June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

வாக்காளர்களே… ஆன்லைனில் பூத் சிலிப் பெறுவது எப்படி; இதோ சில எளிய வழிமுறைகள்

1 min read

Voters… How to get a booth slip online; Here are some simple steps

22.4.2026
சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட தகுதியுள்ளவர்கள் தயாராகி வரும் சூழலில் பூத் ஸ்லிப் கிடைக்க பெறாதவர்கள் எளிதில் ஆன்லைனில் பெறலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. அதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளம் voters.eci.gov.in அல்லது electorsearch.eci.gov.in என்ற முகவரியில் உள் நுழையவும்.
  • தேர்தல் கமிஷன் இணையதளத்தின் முகப்பில் உள்ள Search in Electoral Roll என்பதை தேர்ந்து எடுக்கவும்.
  • வாக்காளர்கள் பற்றிய தகவல்களை தேட அல்லது அறிந்து கொள்ள அங்கே 3 வழிகள் திரையிடப்பட்டு இருக்கும்.
  1. விவரங்கள் மூலம் (Search By Details): உங்கள் பெயர், தந்தை பெயர், வயது, மாவட்டம், சட்டசபை தொகுதி மாநிலம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தேடலாம்.
  2. வாக்காளர் அடையாள அட்டை மூலம் தேடுதல்(Search by EPIC); வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டு உள்ள இலக்கங்களை பதிவிட்டு தேடலாம்.
  3. செல்போன் எண் மூலம்(Search By Mobile number); வாக்காளர் அட்டையில் நீங்கள் ஏற்கனவே இணைத்துள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்து தேடலாம்.
  • மேற்கண்ட 3 வழிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து, சரியான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் திரையில் ஒளிரும் ரகசிய குறியீட்டை(Captcha) டைப் செய்து தேடுதல்(search) பட்டனை அழுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்த அடுத்த சில வினாடிகளில் உங்களின் விவரங்கள் முழுமையாக திரையில் தோன்றும்.
  • Print Voter Information Slip அல்லது View Detailள என்பதை க்ளிக் செய்தவுடன், உங்களின் பூத் ஸ்லிப் PDF வடிவில் டவுன்லோடு ஆகும். அதனை நீங்கள் பிரிண்ட் எடுத்து எளிதாக பயன்படுத்தலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *